Sunday 23 June 2013

கங்கா குலம்




காடாய்க்கிடந்த கொங்க தேசத்தை நாடமைத்த ஆட்சியாளர்களான கொங்க வெள்ளாளர்கள் கங்கா குலத்தை சார்ந்தவர்கள். கங்கா நதி, கங்கா குலம் மற்றும் கங்கையுடன்  கொங்க வெள்ளாளர்கள் தொடர்புகளை பற்றி காண்போம்.

கங்கா குல வரலாறு:


ஆதியில் கோசலதேசத்தில் (கங்கைக்கும் சரயு நதிக்கும் இடைப்பட்ட பகுதி) சூரியவம்சத்து முதல் அரசரான இக்ஷ்வாகு முதலான அரசர்கள் ஆண்டுவந்தனர். 



சூர்ய வம்சமானது இக்ஷ்வாகு, ஹரிச்சந்திரன், ஸகரன், பகீரதன், சிபி, திரிசங்கு, திலீபன், ரகு, அஜன், தசரதன், ஸ்ரீராமபிரான் முதலிய மாமன்னர்கள் அவதரித்த வம்சம். ரகு குலம்-இக்ஷ்வாகு வம்சம் - பரத குலம் என்பன வேறு பெயர்களாம்.




உலகிற்கு உணவு படைக்க மகாவிஷ்ணுவால் படைக்கப்பட்டவர் மரபாளன். கைலாசத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும்போது நான்முகன் உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட வசதிகளை மக்௧ள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வில்லையே என்று முறையிட்டார். சிவபெருமான் நான் முகனிடம் திருமாலைச் சென்று பார்க்குமாறு பணித்தார். திருமாலிடம் நான்முகன் முறையிடும்போது போதாயன முனிவர் வந்தார். போதாயன முனிவரை அறிமுகப்படுத்தி அவரையே வேண்டிய ஏற்பாடு செய்யுமாறு திருமால் வேண்டினார்.

கங்கா தேவியின் சன்னிதானத்தில் மரபாளனைப் பெற்றுத் தன்னோடு இந்திரலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று போதாயன முனிவர் வேண்டினார். தான் பெற்ற மரபாளனை இரு கைகளாலும் பரிந்து எடுத்து உச்சிமோந்து ஆனந்த முத்தங்கள் தந்து பொன்னுலகு சென்று சிறப்பெல்லாம் பெற்றுப் போதாயனருடன் மண்ணுலகு செல்க மகனே என்று கங்காதேவி அனுப்பி வைத்தாள்.

இந்திரன் எல்லா இன்பங்களையும் குறைவறப் பெற்றிடுக என வாழ்த்தினான். இந்திரன் மரபாளனைச் சரியாசனத்தில் இருக்கச் செய்து பார் முழுதும் ஏர் முனையைத்தான் நம்பியுள்ளது.சகல பிணிகளிலும் தலையான பசிப்பிணியை தீர்க்க ௨ழவுவைத்தியத்தைத் தவிர வேறு உண்டோ? உழவுத் தொழில் இல்லாமல் உலகில் என்னதான் நடக்கும் இதற்கு இணையான தொழில் ஏதுமில்லை என்றான்.

அக்குழந்தை கோசலதேசத்தை ஆண்ட சூர்யவம்ச அரசனின் பட்டத்து ராணி விஜய மகா தேவியின் வயிற்றில் கங்கையில் குளிக்கையில் பிறக்கிறது. கங்கை அளித்த மகனாதலால் அவனை கங்கதத்தன் என்று வழங்கினர். இவனுக்கு மரபாளன் என்று பெயரும்சூட்டி போதாயன மகரிஷி சகலவிஷயங்களையும் பயிற்றுவித்தார்.

இந்திரன், குபேரன் இவர்கள் பெண்மக்களை மணந்த மரபாளன் (வேளாளன்) பூமிக்கு வந்து பயிர்த்தொழில் செய்ய முற்பட்டான்.  மரபாளன் வழியில் நாற்பத்தெட்டாயிரம் குடிகள் உருவாகிறார்கள். இவர்களே நற்குடி நாற்பத்தெட்டாயிரம் வேளிர்கள் என்று சங்க இலக்கியங்களால் கூறப்படுகிறார்கள். இம்மரபாளனது வம்சத்தவரே கங்காகுலம் என்று வழங்கப்படுகின்றனர். 

இவர்கள் அவந்திதேச அரசன் தொடர்ந்து தாக்கிய காரணத்தால் தெற்கே காஞ்சிநகரையும் அதனை சுற்றியிருந்த கானகங்களையும் நாடாக்கி சோழதேசத்தின் வடபகுதில் தென்பெண்ணையின் வடபகுதியில் வாழ்ந்துவருகையில்கரிகாலசோழனது இரண்டாவது மகனும்தாசி வயிற்றில் பிறந்தவனுமான ஆதொண்டன் என்பவனுக்கு இப்பகுதியினை தொண்டமண்டலம் என்று பெயர்சூட்டி பட்டம் கட்டினார் சோழன். முறைதவறி பிறந்த அவன்கொங்கர் வீட்டில் பெண் கேட்க, கருநாயை கட்டி வைத்துவிட்டு கொங்கர் வடதிசை நோக்கி இடம்பெயர்ந்தனர். அப்பொழுது வெள்ளாளர்களது அரசரான சேரமான் அவர்களைத் தடுத்துவனப்பிரதேசமான தனது தேசத்துக்கு வரவழைக்கிறார்.  கொங்கு காணிப்பட்டயம் என்னும் புராதன பட்டயம் கொங்கதேசத்தின் பூர்வகுடிமக்களான நற்குடி  48,000 வெள்ளாளர்களும்பசுங்குடி 12,000 செட்டிமார்களும் காஞ்சியிலிருந்து இங்கு குடியேறி தமக்கான தேசமாக சேரதேசம் எனும் கொங்கதேசத்தினை அமைத்துக்கொள்கையில் தத்தம் குலகுருக்களுடன் குடியேறினார்கள் என்கிறது. 




சோழ மன்னனின் சேனாதிபதியால் செட்டியார் இல்ல பெண் கொல்லபடுகிறார். அந்த பிரச்சனையில் செட்டியார்களுக்கு ஆதரவளித்து அவர்கள் பொருட்டு போராடிய வெள்ளாளருடன் செட்டியார்களும் வந்ததாக வரலாறு.

ஆக, கொங்க வெள்ளாளர் என்போர், ஆதியில் பாரத வம்சம்/இக்ஷ்வாகு வம்சம்/ரகு வம்சம்  என்று சொல்லப்படும் சூர்யவம்சத்தில் இருந்து கிளைத்த கங்கா குலமாவர்.

வரலாற்று ஆவணங்களில் கங்கா குல குறிப்புகள்:

வேளாள புராணம்:

மரபாள சூடாமணி என்னும் ஆதி நூலை தழுவி எழுதப்பட்ட வேளாள புராணம் என்னும் நூல், கங்கா குலத்தவரான வெள்ளாளர் உருவான வரலாற்றை சொல்கிறது. மரபாளன் பிறப்பு முதல் அவர் வாழ்வின் பல்வேறு கட்டங்களை விவரிக்கிறது. இக்காவியம் முழுமையும் வேளாளர் கங்கை குலத்தவர் என்பதற்கான அத்தாட்சியாக உள்ளது.




மங்கள வாழ்த்து:

கொங்கு வெள்ளாளர் இல்ல திருமண சீர்களில் மங்களனால் (கொங்க நாவிதர்) பாடப்படும் கொங்கு மங்கள வாழ்த்தில் பின்வரும் வரியை காணலாம்.

"கங்கா குலம் விளங்க கம்பர் சொன்ன வாழ்த்துரையை.." என்கிறார்..



கொங்கு மங்கள வாழ்த்து பாடல் வீடியோ



கம்பராமாயணம்:

அதேபோல ஸ்ரீராமபிரான் முடிசூட்டு விழாவில் திருவெண்ணெய்நல்லூர் வள்ளல் சடையப்ப கவுண்டரின் முன்னோர் முடி எடுத்து தர அதை குலகுரு வசிஷ்டர் வாங்கி முடிசூட்டுகிறார் என்று சொல்கிறார். இதன் மூலம் சூரிய குலத்துக்கும் கங்கை குலத்துக்குமான தொடர்பு ஆராயப்படவேண்டியது.




ஆதாரம்: 
ஸ்ரீராமர் முடிசூட்டலை விவரிக்கும் கம்ப ராமாயண வரிகள்,

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி

கொங்கு மண்டல சதக பாடல்,

தாவினில் கூடிய மூவரி லரசர் சபைதனிலே
சோபன மங்கையும் வந்துதித் தாள்சுய மம்மையப்பர்
சேவினி லேறி நல்லவர்க் காக்கங்கை சிறந்துவளர்
வாழ்வது கொண்டநற் காராளர் வாழ்கொங்கு மண்டலமே.

கொங்கேழ் நதியுஞ் சிவகிரி மேவு குவலயமுங் 
கங்கா நதியும் புகழ்பெறு வாசமுங் கற்புநிலை 
சிங்கா சனமுந் தசரதரா சன்றன் செல்வருக்கு 
மங்காக் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே 

அண்ணமார் வரலாறு:


செப்பேடு-பட்டயம்-கல்வெட்டு-சுவடிகள் 

கொங்க தேசத்தின் வரலாற்று ஆவணங்களான செப்பேடுகள், பட்டயங்கள், கல்வெட்டுக்கள் பலவற்றிலும் கங்கா குலம் குறித்த குறிப்புகள் உள்ளன.

சிலப்பதிகாரம்:

"கொங்கிளம் கோசர்.." கொங்க தேசத்தை கோசர் மரபினர் ஆண்டதை உறுதி செய்கிறது. ஆதியில் கோசல தேசத்தில் இருந்து தென்னாடு வந்ததை கொண்டு ஆராய வேண்டிய தகவல்.

கொங்கு மண்டல சதகம்:

கொங்கு மண்டல சதகம் மூன்று தொகுதிகளிலும் (வாலசுந்தர கவி / கம்பனாத சுவாமி/கார்மேக கவிஞர்) உள்ள பாடல்களில் கங்கை குலம் பற்றிய திரட்டு.

தேவா வமுர்தத் துருவாசர் சாபந் தேவேந்திரர்க்குப் 
போபோ வெனவைந் தருங்கடற் புக்கலும் பொன்னுலகோர் 
கோவா னிதியொடு கங்கை குலமுங் கொடுத்தழைத்து 

வாவா வெனச்சொல்லி அமுதூட்டி வாழ்கொங்குமண்டலமே

புரந்தர ராசன் செய்தேவா வமுர்தம் புனலொளிந்து 
மிருங்கலி காலமக் காலத்தி லேயிவற் கேற்குமென்று 
விருந்தை யளித்து நற்றேவா வமுர்தமும் விண்ணவர்கள் 
வரம்பெறு நேர்கங்கை வங்கிசம் வாழ்கொங்கு மண்டலமே

வில்லா லெறிந்து திருவானி நாதர் விமலர்பதங் 
கல்லாலெறிந்து மலர்தெரிந்தோர் கங்கை வங்கிசமுங் 
சொல்லாலெறிந்துமுன்வாளாற் கழுத்தைத் துணித்துவைத்தும் 
வில்லா லெறிபவர் காண்பது காண்கொங்கு மண்டலமே

அற்றது பொருதப் பாடி யவ்வைக் கடிமையென்று 
பெற்றவன் கீர்த்தி கங்கா குலயோகப் பிரபலனாம் 
முத்தமிழ் வாணர்க்கு வேண பவுசுமின் பாய்க் கொடுத்து 
வைத்தவன் அந்துவ கோத்திரத் தோன்கொங்கு மண்டலமே

கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே 
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர் 
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச்செய் 
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே.

நாலாறு நாடது நாற்பத்தெண் ஆயிரம் நற்கொங்கு சேர் 
பாலான கங்கைதன் வங்கிசத் தோர்பச்சைப் பார்ப்பதியூர் 
சேலாங் கருணை வடிவுடை நாயகி சேரும்வஞ்சி 
மாலாங் கமலம் அமுதூட்டுவார்கொங்கு மண்டலமே

நெய்யினிற் கையிட நாற்பத்தெண் ணாயிரம் நீடுபெற 
மெய்யினிற் கங்கை குலத்தில்வே ணாடன் விளங்குமகள் 
கய்யினில் நெய்யுயர் பொன்னூசல் சேரக் கனிந்தவன்னை 
வய்யிற் கனக முடிசூட்டி வாழ் கொங்கு மண்டலமே.

சாத்தந்தை கோத்திரன் பண்ணைகு லேந்திரன் தமிழ்ச்சடையன் 
கோத்திரம் நாற்பத்தெண் ணாயிர மென்னுங் குலம்விளங்க 
ஆத்திப நல்லூர் கலியுக மாயிர மைம்பத் தொன்றில் 
வாழ்த்துவர் கங்கையின் வங்கிசத் தோர்கொங்கு மண்டலமே.

ஏர் எழுபது

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம்

திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம்

திருக்கை வழக்கம்

கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி

மங்கை பிரியாமல் வாழுங்


கொங்கு வெள்ளாளர் குலத்துப்பாடல்:

செயகங்கை குலமரபுளோர் 
சித்திரமே ழிக்கொடிக் குவளைமா லைப்புயர் 

கதிதனஞ்சய குலமும் 
கங்கா குலத்தரசர் 

சந்ததம் புகழ்கங்கை வங்கிசம் விளங்கவே..


கொங்கு மண்டல ஊர்த்தொகை:

தீங்கிலாத கங்காகுல நாட்டார் செழிக்குங் 
         காங்கேய நாடெங்கள் நாடே.

கொங்கதேச ராஜாக்கள்:

பழம்பெரும் வரலாற்று ஆவணமான கொங்கதேச ராஜாக்கள் புத்தகத்திலும் கங்கா குலம், கங்கர்கள், கோசர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.

கங்கா தேவி:




நதிநீரில் முதலை- முதலை முதுகில் வெண் தாமரை- அம்மலர்மீது வெண்ணிற ஆடையுடுத்திய கங்காதேவி கையில் தாமரை, நீர்க்குடம் ஏந்தி, இரு கைகள் அபயவரத ஹஸ்தமாக புன்னகையுடன்  அமர்ந்து காட்சி தருகின்றாள். தலை கிரீடத்தில் பிறைச் சந்திரனைக் காணலாம்.


கொங்க தேச காணியாச்சி கோவில்களில் காணப்படும் கங்கா தேவி சிற்பம்
மகர வாகனத்துடன் 


எல்லோரா குகையில் கங்கா தேவி சிற்பம் -மகர வாகனத்துடன்
நேபால் அரச மாளிகையில் 

கலிபோர்னியா (அமெரிக்கா) மியூசியத்தில் 9 நூற்றாண்டு  சிற்பம் 

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்  16 நூற்றாண்டு 

பேஸ்நகர் போபால் - மயூர பேரரசின் காலத்தில் செய்யப்பட்ட சிற்பம் 

அஹோபில நரசிம்மர் கோவில் - சிற்பம் விஜயநகர அரசின் காலம் 16 நூற்றாண்டு 

பூரி ஜெகநாதர் ஆலயம் - 12 நூற்றாண்டு 


கங்கா தேவியின் வாகனம் மகரம். மகரவாகினி என்று சொல்வார்கள். மகரம் என்பது முதலையின் வகையே. ஆங்கிலத்திலும் மகர் (Mugger) வகை என்று உயிரின பெயரோடு முதலை வகை உள்ளது.


கங்கா தேவி செல்லும் பாதை 

கங்காதேவி பாரதத்தின் மிக புண்யமான அதிக மக்களால் வணங்கப்படும் நதி. இந்து மக்களின் மிக முக்கிய கோவிலான காசியும் மிக முக்கிய மிக பெரிய விழாவான கும்ப மேளாவும் கங்கையை சார்ந்தே உள்ளது. கும்ப மேளாவின் போது கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்வர். கங்கையின் மகத்துவமும் தனித்துவமும் விஞ்ஞான உலகும் வியக்கும் அதிசயம்.



காசியில் கங்கை கரையில் கங்கா ஆர்த்தி நடைபெறும். கண்களுக்கு விருந்தளிக்கும் பக்திப்பூர்வமான நிகழ்ச்சி.


வாரணாசியில் கங்கா ஆரத்தி 
கங்காதேவி பூமிக்கு வந்த தினம் வைகாசி மாத வளர்பிறை தசமி ஆகும். அதை கங்கா தசரா என்று மக்கள் மிகப்பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

கங்கா ஆரத்தி பூஜை:






கங்கா தேவியின் வரலாறு:

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தில், மகாபலிசக்ரவர்த்தி தந்த வாக்கின்படி மூன்றடியை அளக்க வானளாவ வளர்ந்தார். முதலடியால் பூவுலகை அலைந்துவிட்டு இரண்டாம் அடியால் விண்ணுலகை அளக்கையில் பிரம்மலோகம் உள்ள்ளிட்ட அனைத்து லோகங்களையும் அடைத்து நின்றது. அப்போது பிரம்மதேவர் தன் கமண்டல நீரை விஸ்வரூப வாமனரின் பாதத்தில் விட அது பெருக்கெடுத்து ஓட துவங்கியது. விண்ணுலகில் மந்தாகினி என்னும் பெயரோடு அனைவரையும் ரட்சித்து வந்தார் கங்கா தேவி. பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருந்து பிறந்ததால் பிரம்மாவின் புதல்வி என்றும் அழைக்கபடுகிறார்.





பிரம்ம லோகத்தில் பிரம்மா வாமனர் பாதத்தை
கமண்டல நீர் கொண்டு அபிசேகம் செய்தல் 



சூர்ய வம்சத்தில் அரிச்சந்திர மகாராஜாவின் பேரனின் பேரனாக பிறந்த சகரன் எனும் அரசன், சுமதி என்றழைக்கப்பட்ட பெண்ணை மணந்து அறுபதாயிரம் பிள்ளைகளை பெற்றான். சகரன் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தான். அசுவமேத யாகங்கள் செய்து நாட்டை வளமாக்கினான். 

மாமன்னர் சகரன்- ராணி சுமதி 

அஸ்வமேத யாகத்தின் பொருட்டு குதிரையை எல்லா தேசத்துக்கும் சகர குமாரர்கள் அழைத்து சென்றார்கள். 


அஸ்வமேத யாக குதிரையோடு செல்லும் சகர குமாரர்கள் 

எல்லா தேசத்து மன்னர்களும் சகரரின் ஆட்சியை ஏற்று அடிபணிந்தார்கள்.


மன்னர்கள் சகர குமாரர் படையை-யாக குதிரையை வரவேற்று
ஆட்சியை ஏற்றுகொள்ளல் - இந்திரன் மேலிருந்து கவனித்தல் 


இந்திரன் எங்கே சகரன் தனது இந்திர பதவியை அடைந்துவிடுவாரோ என்று பயந்து யாக குதிரையை கடத்தி சென்று பாதாள லோகத்தில் தவம செய்து கொண்டிருந்த கபில முனிவர் அருகே கட்டி வைத்து விட்டார்.

இந்திரன் யாக குதிரையை பாதாள லோகத்தில் மறைத்தல் 

சகரன் தன்னுடைய அனைத்து பிள்ளைகளையும் யாகக் குதிரையை தேடும்படி அனுப்பினான். பூமண்டலத்தின் மேல்பகுதியில் தேடினார்கள்; கிடைக்காததால் பூமிக்கு கீழேயுள்ள பாதாளத்தை ஊடுருவி பயணித்தனர். பாதாளத்தில் தவமிருந்த கபில முனிவருக்கு அருகே யாகக் குதிரையை கண்டனர். கோபமானார்கள். இவர்தான் இதைக் கவர்ந்து வந்திருப்பார் என நினைத்து அவரைத் தாக்கத் தொடங்கிய அந்த கணத்தில் அவரது கோபத்தால் எரிந்து சாம்பலானார்கள். 


கபில முனிவரின் கோபாக்கினியால் சகர குமாரர் பஸ்பமாதல் 


சகரன் தன் பிள்ளைகளைக் காணாது வேதனையுற்றான். தேசினி எனும் மங்கைக்கு பிறந்த மைந்தனான அசமஞ்சனிடம் விஷயத்தை சொன்னான். ஆனால் இவனாலும் அறுபதாயிரம் பிள்ளைகளை மீட்டுக் கொண்டுவர முடியவில்லை. ஆனால், இவனுக்குப் பிறந்த மகனான அம்சுமான் மட்டும் அறுபதாயிரம் பேர் சென்ற பாதையைக் கண்டுபிடித்தான். பாதாளத்தை அடைந்தான். கபில முனிவரை வணங்கினான். தான் வந்த நோக்கத்தைப் பணிவோடு சொன்னான். கபில முனிவர், ‘‘இதுதான் உன் பாட்டனார் சகரன் அசுவமேத யாகம் செய்வதற்காக வைத்திருந்த குதிரை. இந்தச் சாம்பல் குவியல்தான், அறுபதாயிரம் சகர புத்ரர்கள். விண்ணுலகில் பாயும் மந்தாகினி இவர்கள் மீது பட்டால் உயிர் பெறுவார்கள்’’ என்று விளக்கமும் விமோசனமும் சொன்னார்.

அன்சுமன் கபில முனிவர் வாயிலாக உண்மையை உணர்தல்
யாக குதிரையை பெற்று செல்லல் 

குதிரையை மட்டும்தான் அம்சுமானால் மீட்க முடிந்தது. மந்தாகினியைக் கொண்டு வர முடியவில்லை. அம்சுமான் இறந்து போனான். அவருடைய பேரனும் திலீபனின் மகனுமான பகீரதன், ‘‘நான் எப்படியேனும் அந்த மந்தாகினியைக் கொண்டு வருகிறேன்’’ என்று கடுந்தவமிருந்தான். 



ஒற்றை காலில் தவம செய்யும் பகீரதன் 


மாமல்லபுரம் சிற்பத்தில் கங்கா தேவி வரலாற்று நிகழ்வுகள் 



குளிர்ந்திருந்த மந்தாகினியே பகீரதனின் ஒற்றைக்கால் தவத்தை எண்ணி தவித்துப்போய் பகீரதனிடம் கேட்டாள்: ‘‘நான் வருகிறேன். ஆனால், என் வீழ்ச்சியை தாங்கும் பலம் இங்கு யாருக்கு உண்டு? என் வேகத்தால் பூமியைத் தாண்டி அதல, பாதாள, ரசாதலத்துக்கு நான் சென்று விட்டால் என்ன செய்வீர்கள்?’’

பகீரதன் முன் கங்கா தேவி பிரசன்னமாதல் 


எனவே, பகீரதன கங்கா பிரவாகத்தை தாங்கி கொள்ள வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருக்க துவங்கினார். காட்சி தந்த மகாதேவர் பகீரதனின் கோரிக்கைக்கு மனமிரங்கினார்.

சிவபெருமான் காட்சி தந்து
பகீரதன் கோரிக்கைக்கு செவி சாய்த்தால் 

விண்ணுலக நாயகி பூவுலகிற்கு பயணித்தாள். விண்ணுலகில் இருந்து வந்த கங்கா வெல்ல பிரவாகத்தை சிவபெருமான் தன்னுடைய ஜடாபாரத்தில் தாங்கினார். இப்போது, மந்தாகினி, கங்கை என்று பெயர்கொண்டாள். ‘கௌஹ்’ என்றால் பூமி. ‘காம்ஹா’ என்றால் அடைந்தாள். இதைச் சேர்த்தால் (கௌஹ்+காம்ஹா) கங்கா என்று வரும். தேவலோக நதி பூமியை அடைந்து கங்கா என்று பெயர் பெற்றாள்.



கங்கை பிரவாகத்தை ஜடாமுடியில் ஏற்றல் 



சிவபெருமானின் ஜடாமுடியால் வேகம் தணிந்து அடங்கினார். அதன்பின்னர், ஒரு ஒற்றை நீர்தாரையாக சிவபெருமானின் தலை உச்சியில் இருந்து பெருகி வர துவங்கினார். இப்படியாக கங்காதேவி பூமிக்கு வந்த தினம் வைகாசி மாத வளர்பிறை தசமி ஆகும். அதை கங்கா தசரா என்று மக்கள் மிகப்பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

ஒற்றை நீர்தாரையாக வந்து உலகை உய்விக்கும் கங்கை 

இமயத்தின் உச்சியில் தோன்றி வந்ததால், இமயத்து அரசனான ஹிமவானுடைய புத்திரியாகத் தன்னை பாவித்தாள். ஹைமவதி என்ற திருப்பெயரிட்டு அழைத்தார்கள். ஈசனுடைய தலையை ஆனந்த மயமாக செய்ததால் அலகநந்தா என அன்போடு அழைத்தனர். அலகம் என்றால் கேசம், ஜடை என்றும் அதை ஆனந்தப் படுத்தியதால் அலகநந்தா என்றனர். கங்கையை தாங்கியதால் ஈசன் கங்காதரனாக அருட்கோலம் காட்டினார். ஆனந்தமாக ஓடியவள் நேரே பாதை அறியாத குழந்தைபோல ஜன்ஹூ என்ற மகரிஷியின் ஆசிரமத்திற்குள் கொலுசு சத்தமோடு நடக்கும் குழந்தைபோல குடுகுடுவென நுழைந்தாள். ஜன்ஹு மகரிஷி கங்கையை விழுங்கிவிட்டார்.


ஜன்ஹு மகரிஷி கங்கையை விழுங்குதல்

பகீரதன் கேட்டுக் கொண்டதால் கங்கையை காதுவழியே விடுவித்தார். இதனால் கங்கைக்கு ஜான்ஹவி என்ற பெயரும் உண்டு. ஜன்ஹூ மகரிஷி, ‘‘இவள் என் மகளைப் போன்றவள்’’ என்று சீராட்டினார்.


ஜன்ஹு மகரிஷி கங்கையை விடுவித்தல்



இவ்வளவு தடைகளையும் பொறுமையாக ஏற்று, தந்தையின் பின்னே வரும் நல்மகள்போல பகீரதனின் பின்னால் அடக்கமாக வந்தாள். பகீரதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வந்ததால் இவளுக்கு பாகீரதி என்ற பெயரும் உண்டு. 


பகீரதனை பின்தொடரும் கங்கை 

பகீரதன் பாதாளத்திலுள்ள சகர புத்திரர்களின் மீது கங்கையை பாயச் செய்தான். அறுபதாயிரம் பேரும் உயிர் பெற்றனர். கங்கை பாதாளத்திற்கு பாய்ந்தபோது போகவதி எனும் திருநாமத்தை ஏற்றாள்.



பஸ்பமாக இருந்த சகர குமாரர்கள்
கங்காதேவியால் விமோசனமடைதல் 

 கங்கையை பூமிக்குக் கொண்டுவர பகீரதன் முயற்சித்ததையெல்லாம்தான் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். எங்கேயோ எப்போதே உருவானவளை புராண காலத்திய பகீரதன் கொண்டு வந்தான். பகீரதன் திடீரென்று கங்கை வேண்டுமென நினைக்கவில்லை. பரம்பரை பரம்பரையாக முயற்சித்த விஷயம் பகீரதனால் முடிந்திருக்கிறது. கங்கை பூலோகத்தில் மட்டுமல்லாது, திரிபுவனத்திலும் பாய்ந்து செல்கிறாள்.
ஸ்ரீ கங்கா தேவி 



எத்தனையோ ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களுக்குத்தான் மூன்று இடங்களில் கங்கா ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். முதலாவதாக ஹரித்வார். ஹரியை அடைய இத்தலம் துவாரமாக இருப்பதால் ஹரித்வார் என்றழைக்கப்படுகிறது. இரண்டாவது காசி. மூன்றாவதாக வங்காளத்தில் உள்ள கங்கா சாகர சங்கமம். இந்த மூன்று இடங்களும்தான் அத்தனை பிரசித்தி பெற்றவை. காசி எனும்போதே எல்லோருக்கும் கங்கைதான் நினைவுக்கு வரும். காசி மகாத்மியமே கங்கா மகாத்மியமாகும். காசிக்கு எத்தனை விசேஷம் உண்டோ அத்தனை விசேஷமும் கங்கைக்கும் உண்டு. மதங்களைத் தாண்டிய ஈர்ப்பு பெற்றது காசி கங்கை. 



பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு கங்கா மாதாவின் சரித்திரத்தை சொல்லும் ராமாயண பகுதி (வீடியோ).






புராணங்களில் கங்கா தேவி:

புராண காலம் தொட்டு இன்று வரை கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். பாவங்களை தன்னிடத்தே கரைத்துக் கொண்டும் புண்ணியச் சாரலை வீசிக்கொண்டும் யுகம் யுகமாக பிரவகிக்கிறாள். எத்தனை ரிஷிகள் கங்கைக் கரையில் அமர்ந்து தவமியற்றியிருக்கிறார்கள்! எப்பேற்பட்ட மாமன்னர்கள் இவளை தொழுதிருக்கிறார்கள்! ஆதிசங்கரர்கூட, ‘‘நான் இப்படியே கங்கை ஓரமாக ஒரு புல்லாக இருக்க மாட்டேனா’’ என்று உருகுகிறார். கங்கையின் தீர்த்தத்தை மொண்டு குடித்து கரையருகே தவமியற்றி ஆத்மானந்தம் அடைந்த ரிஷிகள் ஆயிரக்கணக்கில் உண்டு. வயது முதிர்ந்த நிலையில் பலர் காசியில் போய் நிரந்தரமாகத் தங்கிவிடுவர். தம் சரீரத்திலிருந்து பிரியும் உயிர் மோட்சத்தை அடைய கங்கை உதவுகிறாள் என்ற ஆழமான நம்பிக்கை. 

கபீர்தாசர் இக்கரை ஓரத்தில்தான் தனது குருவிடமிருந்து ராமநாம உபதேசம் பெற்றார். ஜைன மத துறவிகள் இங்கு வருவதையே மிக முக்கியமாக கருதுகிறார்கள். ஆதிசங்கரருக்கு காசி விஸ்வநாதரே புலையன் வேடத்தில் வந்து உபதேசித்து காட்சி தந்தார். சாஸ்திர சம்பிரதாயம் அறிந்தவர்களும் சரி, எதுவுமே தெரியாதவர்களும் சரி, இத்தலத்தை பொறுத்தவரை சமம்தான். மகாபண்டிதரும் ஒன்றுதான், மயானக் காவலனும் ஒன்றுதான். ஏனெனில், காசிக் கங்கையின் தல சாந்நித்ய பலத்தினாலேயே வேதாந்த ஞானம் அநாயசமாக வாய்த்து விடுகிறது. பாமர ஓடக்காரன் கூட வேதாந்த விஷயங்களை பாடல்களாக பாடும் அதிசயத்தை இங்கு காணலாம். இதற்கு காரணம் அவன் சுவாசிக்கும் கங்கையின் ஞானக்காற்றுத்தான் எனில் அது மிகையில்லை. 

அனுசுயா தேவி:
பாரதத்தின் தென் திசையில் அமைந்திருந்தது காமதம் எனும் வனம். அங்கே, பிரம்மபுத்திரரான அத்ரி முனிவரும் அனுஸுயா தேவியும் தவ வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்கள். அமைதிக்கும் தவத்துக்கும் ஏற்ற அந்த வனத்தில் மேலும் பல ரிஷிகளும் முனிபுங்கவர்களும் வாழ்ந்தனர். இப்படி இருக்கையில், ஒருமுறை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மழையின்றிப் போனது. தவ பூமி வறண்டது. மரங்களும் செடிகளும் இலைகள் உதிர்ந்து, மொட்டையாக நின்றன. ஆவினங்கள் நீரின்றி வாடி, மடிய ஆரம்பித்தன. உணவின்றிக்கூட உயிர் வாழ்ந்துவிடலாம். நீரின்றி உயிர் வாழ முடியுமா? முனிபுங்கவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஒவ்வொருவராக காமத வனத்தை விட்டு வெளியேறினர்.

ஆனால், அத்திரி முனிவரோ நடந்தது எதுவும் அறியாமல், கடும் நிஷ்டையில் இருந்தார். அவரது மனைவி அனுஸுயாதேவியின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. முனிவரை விட்டுப் பிரியாமல், துயரங்களை எல்லாம் சகித்துக்கொண்டு, அன்ன ஆகாரமும் நீரும்கூட இல்லாமல் தன் கணவருக்குப் பணிவிடை செய்துகொண்டு இருந்தாள். பூமித்தாய் வளமாக இருந்தபோது, அவளை விரும்பி, அவள் தந்த செல்வத்தை அனுபவித்தோம். அதே பூமித்தாய் நீரின்றித் தவிக்கும்போது, அவளை விட்டுச் செல்வதா? அது, நன்றி மறந்த செயல் அல்லவா? வறண்ட காலத்திலும்கூட பூமித்தாயுடன் இருந்து, அவளின் துயரத்தை நாமும் பகிர்ந்துகொள்வதுதான் தர்மம் என்று நினைத்தாள் அனுஸுயா. அதனால், எந்த நிலம் நீரின்றித் தவித்ததோ, அதே நிலத்தில் மீண்டும் நீர் பெறச் செய்யக் கடும் தவத்தைத் தொடங்கினாள். அத்திரி முனிவர் தவமிருந்த இடத்தின் அருகில், வறண்ட மண்ணைச் சேர்த்துச் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கினாள். அதை மிகுந்த சிரத்தையோடும் பக்தியோடும் பூஜை செய்தாள். தினமும் அந்த லிங்கத்தையும் தன் கணவரையும் வலம் வந்தாள். தன்னை மறந்து தவத்தில் ஆழ்ந்திருந்த அத்திரி முனிவரைச் சுற்றி புற்று வளர்ந்திருந்தது. அவரை விடவும் கடும் தவம் செய்து கொண்டிருந்தாள் அனுஸுயா.

இவர்கள் இருவரின் தவத்தைக் கண்டு தேவர்கள் எல்லாம் வியந்தனர். திடீரென ஒருநாள் அத்திரி முனிவர் தவம் கலைந்து, கண் விழித்தார். அருகில் தன்னை மறந்து சிவ பூஜையில் அனுஸுயா ஈடுபட்டிருப்பதைக் கண்டார். சுற்றிலும் இருந்த வறண்ட சூழ்நிலையையும் வெப்பத்தையும் பார்த்தார். கடும் பஞ்சத்தாலும் பசிப் பிணியாலும் தன்னைத் தவிர மற்ற எல்லோரும் காமத வனத்தை விட்டு நீங்கிவிட்டதை உணர்ந்தார். வறண்ட அந்த பூமியை வளமாக்க, தன் பத்தினி அனுஸுயாதேவி செய்யும் சிவ பூஜைதான் பலன் தரவேண்டும் என்று அறிந்தவர், அனுஸுயா.. என்று அழைத்தார். அவள் எழுந்து வந்தாள். அவளிடம் கமண்டலத்தைக் கொடுத்து, கங்கை ஜலம் கொண்டு வா என்றார். சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத வறண்ட கானகத்தில், கங்கைக்கு எங்கே போவது என்று சிந்திக்கவில்லை அனுஸுயா. கமண்டலத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அவள் செய்த சிவபூஜை காரணமாகக் கட்டுண்டு, அருகிலேயே நின்ற சிவபெருமானின் அனுக்கிரகத்தால், கங்காதேவியே அனுஸுயா முன் தோன்றினாள். எல்லோரும் போய்விட்ட பிறகு இந்த வனத்தில் தங்கியுள்ள இந்தப் பெண் யார்? என்று அனுஸுயா அதிசயத்தாள். அப்போது, அவள் அம்மா அனுஸுயா ! நான்தான் கங்காதேவி. உன் சிவ பூஜையாலும், பதி சேவையாலும் மகிழ்ச்சியடைந்த இறைவன் சிவபெருமானே என்னை இங்கே அனுப்பி வைத்தார். நீ வேண்டும் வரம் கேள்! என்றாள். தாயே கங்காமாதா... வறண்ட இந்தப் பூமித்தாயை வளமாக்கு. இதோ... இந்தக் கமண்டலத்தில் நீர் நிறைத்து, அட்சய பாத்திரம் போல வற்றாமல், என் கணவரின் நித்திய கருமங்களைச் செய்ய வழி செய் என்று வரம் கேட்டாள் அனுஸுயா. கமண்டலத்தை நிறைத்தபின், அனுஸுயை பூஜை செய்த மண் சிவலிங்கத்தின் அருகில், வற்றாத ஊற்றாய்ப் பெருக ஆரம்பித்தாள் கங்காதேவி. அத்திரி முனிவர் தன் மனைவி செய்த சிவபூஜையின் பலனை அறிந்து மகிழ்ந்தார். அப்போது கங்காதேவியைப் பார்த்த அனுஸுயா, தாயே, உன்னிடம் நான் மற்றொரு வரம் கேட்கலாமா? என்றாள்.


கங்காமாதாவிடம் நீர் பெரும் மாதா அனுசுயை


தாராளமாகக் கேள், தருகிறேன்! ஆனால், அதற்குப் பதிலாக எனக்கு நீ ஒரு வரம் தரவேண்டும் என்றாள் கங்காதேவி. தன்னால் இயன்ற எதுவானாலும் தருவதாகக் கூறினாள் அனுஸுயா. பிறகு, தான் வேண்டிய வரத்தை முதலில் கேட்டாள். பெற்ற தாய் முதுமையும் நோயும் உற்ற காலத்தில் அவளை விட்டுச் செல்லும் மக்களைப் போல, வறண்ட காலத்தில் நிலமகளை விட்டு மக்கள் பிரிந்து விடுகின்றனர். வறண்ட நிலையிலும் பூமியை சிவனாக வழிபட்டவர்களுக்கு வளம் குன்றாமல் வரம் தருபவள் நீ என்று எல்லோரும் உணர வேண்டும் என்று வரம் கேட்டாள். அப்படியே செய்கிறேன். நீ பிரதிஷ்டை செய்த இந்தச் சிவபெருமான் சிரசில் நானே தங்கி, இந்த பூமியை செழிக்கச் செய்கிறேன். ஆனால், இப்போது நான் கேட்கும் வரத்தை நீ தா! என்றாள் கங்கை. கட்டளையிடுங்கள் தாயே, நிறைவேற்றக் காத்திருக்கிறேன் என்றாள் அனுஸுயா. இதுநாள் வரையில் நீ செய்த பதி சேவையாலும், சிவ பூஜையாலும் கிடைத்த புண்ணியத்தில் பாதியை எனக்குத் தானமாகக் கொடு. அன்றாடம் எல்லோரிடத்திலும் நான் ஏற்றுக்கொள்ளும் பாவங்கள் அனைத்தும் நீங்கி, நான் பவித்திரமாகவே இருக்க, அந்தப் பூஜையின் பலன் பயன்படும் என்றாள் கங்காதேவி. அவள் கேட்டபடியே தான் செய்த புண்ணியத்தின் பலனைத் தயங்காமல் தானம் செய்தாள் அனுஸுயா. உடனே, அனுஸுயா பூஜித்த மண் லிங்கத்தில் இருந்து சிவபெருமான் தோன்றினார். ருத்ரன், பைரவன், மிருத்யுஞ்சயன், சங்கரன், சிவன் என்ற ஐந்து முகங்களுடன் பஞ்சமுக மகாதேவனாகக் காட்சி தந்தார் சிவபெருமான். அத்திரி முனிவரும் அனுஸுயாவும் பக்திப் பரவசத்தோடு, ஹரஹர மகாதேவா.. என்று கூறிப் பணிந்தனர். கங்கை கலகலவெனப் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடி, வறண்ட பூமியை வளப்படுத்தினாள். பூமித்தாய் மனம் குளிர்ந்தாள். புண்ணியத்தை தானம் செய்த புண்ணியவதி நீ என்று கூறி, சிவபெருமானும் பார்வதியும் அனுஸுயாவுக்கு ஆசி கூறி மறைந்தனர்.


அத்ரி முனைவரும் மகா பதிவிரதை அனுசுயா மாதாவும்


மகாபாரதம்:

சந்திர வம்ச தோன்றலான சாந்தனு முற்பிறவியில் இந்திர சபைக்கு சென்ற போது நடன நிகழ்ச்சி நடந்தது. அந்த சபையில் பிரம்ம புத்திரி யான கங்கையின் ஆடை விலகியது தெரியாது சாந்தனுவின் அழகில் மயங்கி லயித்தார், சாந்தனுவும் அவ்வாறே லயித்திருக்க ஏனைய தேவர் அனைவரும் தலைகுனிந்திருந்தனர். இதை கண்ட பிரம்மா தேவர் கங்கையையும் சந்தனுவையும் மனிதர்களாக பிறக்க சபித்தார்.

இடையே, வசிஷ்ட மகரிஷியால் மனிதர்களாக பிறக்க சாபம் பெற்ற அஷ்ட வசுக்கள் கங்கையின் உதவியை நாட, தாயாக அவர்களை பெற்று எடுத்து பிறந்ததும் கொன்று சீக்கிரம் சாப விமோசனம் அளிக்க ஒப்புக்கொண்டார். 

சந்தனு சந்திர வம்ச அரசனாக தோன்றி கங்கையிடம் காதல் கொண்டு மணந்துகொண்டார். மண நிபந்தனையாக தன்னை பற்றி கேட்க கூடாதெனவும், தான் செய்யும் செயல்களை தடுக்க கூடாது எனவும், அப்படி தடுத்தால் பிரிந்து செல்வேன் என்றும் வாக்கு பெற்றார். 


கங்கையிடம் சாந்தனு காதல் 

கங்கா மாதாவுக்கும் சாந்தனு ராஜாவுக்கும் அஷ்ட வசுக்கள் மகன்களாக பிறந்தனர். ஒவ்வொருவராக பிறக்க, பிறந்தவுடன் கங்கையில் குழந்தையை போட்டு மோட்சம் அளித்தார் கங்கா. 


பிறந்த குழந்தைகளை ஆற்றில் வீசல்


ஆனால், ஏதுமறியா சாந்தனு மகன்களை இழந்த புத்திர சோகத்தால் தவித்தார். தனது மனைவிக்கு தந்த வாக்கிற்கிணங்க கேள்வி ஏதும் கேட்காமல் பொறுத்திருந்தார். ஏழு மகன்களை அவ்வாறு கொன்று இறுதியாக எட்டாவது மகனை கொல்ல போகையில் சாந்தனு பொறுமை இழந்து தடுத்து விட்டார். 


தனது எட்டாவது மகனுடன் கங்கா மாதா சாந்தனுவை பிரிதல் 
அதனால் கங்கை முன் செய்த ஒப்பந்த படி சந்தனுவை பிரிந்தார். 



தேவவிரதனுக்கு வித்தைகள் கற்பித்தல் 
தனது எட்டாவது மகனான தேவவிரதன் (பீஷ்மன்)எடுத்து சென்று 18 வருடங்கள் பாடம் புகட்டி வளர்த்து பின் சந்தனுவிடம் சேர்ப்பித்து விண்ணுலகம் சென்றார்.


கங்கா மாதா மகன் தேவவிரதனை (பீஷ்மர்)
சாந்தனுவிடம் ஒப்படைத்தல் 

காங்கேயன்:




சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் தனது ஆறு முகங்களான ஈசானம், தத்புருஷம், சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், அதோமுகம் (ஞானிகளுக்கு மட்டுமே தெரிவது) மூலம் தனது நெற்றி கண் திறந்து அக்னிகணலை வெளிப்படுத்துகிறார். அந்த ஆறு அக்கினி ஜ்வாலையை வாயுதேவனும், அக்கினி தேவரும் கொண்டு கங்கையில் சேர்க்கிறார்கள். 


ஆறுகணல்களை அக்கினி தேவன் கங்கையில் சேர்ப்பித்தல்
அதை தாங்கிய கங்கை, சரவண பொய்கையில் குழந்தையாக சேர்ப்பிக்கிறார். எனவே கங்கா மாதா ஸ்ரீமுருகபெருமானுக்கும் தாயாக கருதபடுகிறார். எனவே முருகனுக்கு காங்கேயன் என்னும் பெயரும் உண்டாகிறது. (காங்கேயன்-கங்கையின் மைந்தன்)
ஆறு குழந்தைகளாக முருகபெருமான் அவதரித்தல்


கங்கையின் மைந்தனான தேவவிரதன் என்னும் பீஷ்மருக்கும் காங்கேயன் என பெயர் உண்டு. கங்கா குல மக்களாகிய கொங்கு வெள்ளாளரில்  பட்டக்காரர் பலருக்கும் காங்கேய பட்டம் உண்டு (உதாரணம்- மோரூர்/மொளசி கன்ன கோத்திரத்தார் பட்டம் - காங்கேயன்).

சிறுத்தொண்டன்:

சிறுத்தொண்டன் என்னும் சிறுவன் தன் பெற்றோரிடம் மிகுந்த பக்தியோடு பணிவிடைகள் செய்து வந்தான். மக்களின் பாவத்தை ஏற்றதால் துன்புற்றிருந்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் விமோசனம் வேண்டி அகத்தியரிடம் முறையிட அவர் சிறுத்தொண்டன் ஆசி பெற்றால் உங்கள் பாவங்கள் தோலையும் என்றார். 

அப்படி சிறுத்தொண்டன் ஆசியால் விமோசனம் பெற்றனர் கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி புண்யநதி தாய்கள். இங்கு பெற்றோரை பூசித்து, வணங்கி சேவிப்பதன் மகத்துவம் உணர்த்தபடுகிறது.


சிறுதொண்டரிடம் அகத்தியர் சோதனை-நதி மாதாக்கள் விமோசனம் பெறல 

காவிரி உருவாகல்:

அகத்தியர் சிவபூஜைக்காக தான் கொண்டுவந்த கமண்டல கங்கை நீரை விநாயகப்பெருமான் காக்கை வடிவம் எடுத்து தட்டி விட்டதன் காரணமாக விரிந்து ஓடிய நதியே காவிரியாயிற்று.


காவிரி உருவாகல்


போதாயன மகரிஷி: 



மகரிஷி போதாயனர் 

போதாயன மகரிஷி கங்கா குலத்தவரின் ஆதி குருவாவார். இவர் இயற்றிய சாஸ்திரங்கள் மிக தொன்மையும் பழமையும் உடையவை. இவர் யஜூர் வேத சாஸ்திர அடிப்படையில் பயின்றவர். இவர் தர்மம், கணிதம் , அன்றாட கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என் பல  விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார். இவரின் நியம விதிகளை பிராமணர்களில் பல வகை ஐயர் - ஐயங்கார் களும் கொங்கு நாட்டு பிராமணர்களும் குருக்களும் பின்பற்றுகிறார்கள். Pythagoras theorem மற்றும் Pi என்று இன்றைய அறிவியல் உலகம் சொல்லும் சூத்திரத்தை அன்றே வகுத்தவர். இவரின் கணித சூத்திரங்கள் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்பட்டது.

போதாயன தர்ம சூத்திரத்தின் பகுதி 

கங்கா குல முதல்வனான மரபாளனுக்கு சகல வித்தைகளையும் பயிற்றுவித்தவர். போதயனர் மரபாளனுக்கு கற்பித்த விஷயங்கள் மரபாள சூடாமணி என்னும் மிக பழமையான நூலில் தொகுக்கப்பட்டது. 

மரபாளனுக்கு போதாயனர் உபதேசம் 

மரபாள புராணத்தை அடிப்படையாக கொண்டு வீராச்சி மங்கலம் கந்தசாமி கவிராயர் வேளாள புராணம் என்னும் நூலை இயற்றினார்.

வேளாள புராணம் - மரபாள புராணத்தை தழுவி எழுதப்பட்டது

பங்குனி மாத அமாவாசை போதாயன அமாவாசை எனப்படுகிறது. இந்த அமாவாசையானது, பாரத போருக்கு களப்பலி கொடுக்க வேண்டி, ஸ்ரீ கிருஷ்ணர் சூர்ய சந்திரரை சந்திக்க வைத்து ஏற்ப்படுத்திய அமாவாசையை அனுசரித்து வருவதாகும்.

வரலாற்று திரிப்பு சூழ்ச்சி:

கிறிஸ்தவ கல்லூரியான லயோலாவில், பாதிரியார் ஜகத் கஸ்பர், கனிமொழி உட்பட பல கிறிஸ்தவ மற்றும் பல்துறை அறிஞர்கள் (!!) சேர்ந்து சங்கம் 4 என்ற நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்தனர். 

அதில் கொங்கு வெள்ளாளர் இடப்பெயர்வு என சிந்து சமவெளியில் இருந்து வந்ததுபோல காட்ட முயற்சி எடுக்கின்றனர். தமிழ் என்ற அடைமொழியால் முகமூடி போட்டு பல்வேறு இயக்கங்கள் மறைமுகமாக இந்த சதிவேலைகளை செய்து வருகிறது. நம் வரலாறு, புராண இதிகாசங்கள் முதல் நம் மங்கள வாழ்த்து, போதாயன சூத்திரம் உட்பட பல நூல்களும் நாம் கங்கை கரையில் இருந்து இடம் பெயர்ந்ததையும், அதனாலேயே நம்மை கங்கா குலத்தார் என்று அழைக்கப்படுவதையும் உறுதிசெய்கிறது. (மங்கள வாழ்த்து: "கங்கா குலம் விளங்க கம்பர் சொன்ன வாழ்த்துரையை..")


ராமாயணம்:

சூர்ய வம்ச தோன்றலான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் சரித்திரம் ஸ்ரீ ராமாயணம் என்று பல்வேறு மொழிகளில் பல்வேறு நாடுகளில் போற்றி பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. பர்மா, இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அவர்கள் மொழிகளில் இக்காவியம் மக்களால் படிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு அக்காலத்திலேயே ராமாயணம் செல்ல காரணம் தமிழ் வேந்தர்களான சோழர்களே.

சோழர்களுக்கு ராமாயணம் தெரியவர காரணம் தமிழில் கம்பர் இயற்றிய கம்பராயாமணம். கம்பராமாயணம் செய்விக்க கம்பரை ஆதரித்து செயமேற்கொண்டவர் கங்கா குல கொங்க வெள்ளாளர் மரபில் வந்த சடையப்ப வள்ளல் அவர்கள். கங்கா குலம், ஸ்ரீ ராமர் பிறந்த சூர்ய வம்சத்தில் இருந்து கிளைத்தது!

கம்போடியா - ரெம்கர் (Reamker)


தாய்லாந்து - ராமாக்கின் (Ramakien)


லாவோஸ் - ப்ரா லக் ப்ரா லம் (Phra Lak Phra Lam)


மலேசியா - ஹிகயட் செரி ராமா (Hikayat Seri Rama)



பர்மா - யம சட்டவ் (Yama Zatdaw)


இந்தோனேசியா & ஜாவா - ககாவின் ராமாயணா (Kakawin Ramayana)



பிலிப்பின்ஸ் - மஹாராடியா லாவனா  (Maharadia Lawana)